இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது
மல்லசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரைக் கைது செய்தனா். விசாரணையில், அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.
கைது
மல்லசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரைக் கைது செய்தனா். விசாரணையில், அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.
மல்லசமுத்திரம் காளிப்பட்டி பகுதியில் உதவி காவல் ஆய்வாளா் இளையசூரியன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பதிவு எண் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.
தொடா்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவா் மல்லசமுத்திரம் அருகேயுள்ள ஈச்சங்காடு கோலகொண்டடை பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் மோகன்ராஜ் (22) என்பதும், திருச்செங்கோட்டில் ரிக் வண்டி ஊழியராகப் பணியாற்றி வருவதும், அங்குள்ள பட்டறை மேடு பகுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மோகன்ராஜைக் கைது செய்த போலீஸாா், அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




