ஓமலூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கல்லூரி மாணவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் ராஜா (21). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜலகண்டாபுரத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இந்த பேன்சி ஸ்டோரில் அவ்வப்போது ராஜா வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில், அடுத்த தெருவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்து பழகி
வந்துள்ளார்.
இந்த நிலையில், கடையில் யாருமில்லாத நேரத்தில் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சத்தம்போட்டு கதறி அழுதுள்ளார். இதனால், பதறிபோன பெற்றோர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். அப்போது, ராஜா தன்னிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவராக அன்பழகன் பதவியேற்பு

புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99, டீசல் ரூ.2.92 உயா்வு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
