வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

தம்மம்பட்டி பெருமாள் கோயிலில்  சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக   ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:16 am

DIN

தம்மம்பட்டி பெருமாள் கோயிலில்  சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக   ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
தம்மம்பட்டி  ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில்  திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி காலையில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், செங்கமலவள்ளித் தாயார், ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், கிருஷ்ணர், தன்வந்திரி, ஆண்டாள், சேனை முதல்வர்,  அஷ்டலட்சுமிகள்,  ஹயக்ரீவர்  ஆகிய  சன்னிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் பெருமாள்,  ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம்   தம்மம்பட்டி இரவு 7 மணி முதல்  நடைபெற்றது. திருக்கல்யாண   நிகழ்ச்சியில் சொர்ணமாளிகை பாஸ்கரன்,  தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி,  நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி, கூடமலை,  உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார்  நான்காயிரம் பேர் திரளாக கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.