சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா டிசம்பர் 29-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவையொட்டி சனிக்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. திங்கள்கிழமை சந்தனக்காப்பு, ஜனவரி 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செந்தூரக் காப்பு, 2-ஆம் தேதி புஷ்பங்கி, 3-ஆம் தேதி வெட்டிவேர் அலங்காரம், 4-ஆம் தேதி வெற்றிமாலை அலங்காரம், 5-ஆம் தேதி ராஜாங்க சேவை, 6-ஆம் தேதி வடைமாலை சேவைகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து சுவாமிக்கு தினசரி மாலை 5 மணிக்கு பூஜைகள் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இ20 எரிபொருள் பற்றி விரிவான பிரசாரம் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


