ஆத்தூர் அதிமுக அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
ஆத்தூர் அதிமுக நகர கழக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நகரச் செயலாளர் அ. மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை விநியோகித்தார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, ஆத்தூர் வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் ஜி. முரளிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.