ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மரவள்ளிக் கிழங்கில் வெள்ளைப்படுதல் நோய்த் தாக்குதல் அதிகரிப்பு

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்

Updated On :14 மே 2018, 9:08 pm

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர். அவைகள் நன்கு வளரத் தொடங்கியுள்ள நிலையில் மரவள்ளியில் தற்போது வெள்ளைப்படுதல் எனப்படும் நோய்த் தாக்கி வருகிறது.
இதனால் பச்சையாக இருக்கும் அதன் இலைகள், வெள்ளையாக மாறி வருகிறது. இந்த நோயால் வேர்ப் பகுதியில் சேகரமாகும் கிழங்கு, பிடிப்பு இல்லாமல், எடையின்றி காணப்படும். பத்து மாதங்களுக்குப் பின், கிழங்கை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக காணப்படும். விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்.
இதுகுறித்து கிழங்கு விவசாயிகள் கூறியதாவது: தோட்டக்கலை அதிகாரிகளோ, வேளாண் அதிகாரிகளோ, வெள்ளைப்படுதல், நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தடுப்பு முறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.