கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 668 காளைகள் சீறிப்பாய்ந்ததில், 8 பேர் காயமடைந்தனர்.
கூடமலை ஜல்லிக்கட்டுப்போட்டி அரசிதழில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, விழாவானது கூடமலை ஊராட்சி , மொரப்பூர், பாலக்காடு எனும் பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ மருதமுத்து, கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளர் கூடமலை ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாக் குழுத் தலைவர் முத்துலிங்கம் வரவேற்றார். மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு விழா உறுதிமொழி ஏற்றதையடுத்து, தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கொடியசைத்துப் போட்டியைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் நிகழ் ஆண்டு 383 இடங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்திட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 284 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது.கெங்கவல்லி தொகுதியில் இதுவரை தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி ஊர்களையடுத்து, 4ஆவது ஊராக கூடமலையில் விழா நடந்துள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் சிங்கிபுரம், கீரிப்பட்டி,உலிபுரம் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
3 ஊர்களுக்கும் விழா நடத்திட அனுமதி தரப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து முதன்முதலாக ஊர்கோயில் சுவாமி காளை விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர், சேலம் , லால்குடி, திருச்சி, சமயபுரம்,தம்மம்பட்டி,ராசிபுரம்,ஆத்தூர்,தலைவாசல்,வேப்பம்தட்டை, நாமக்கல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து 668 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்டன.
காளைகளைப் பிடிக்க மொத்தம் 255 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 4 பேர் நிராகரிக்கப்பட்டனர் . எஞ்சிய 251 பேர் இரு பிரிவாக காளைகளைப் பிடிக்க களம் இறக்கப்பட்டனர். காளைகள் பிடித்தவர்களுக்கும், சிறந்த காளையர்களுக்கும் பரிசுகள் விழாக் குழுவினரால் வழங்கப்பட்டன.
விழாவில் காளைகள் முட்டியதில் தம்மம்பட்டி ஆர். ரமேஷ் (26), சேலம் பெரியகவுண்டபுரம் வி.ராஜா (25), கூடமலை பா. செந்தில் (28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்ததால், சேலம் அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். ஆர். புதுப்பட்டி விவேக்(28) , கடம்பூர் மணிகண்டன்(22), கண்ணன் (34), சிங்கிபுரம் சார்லஸ் (18), கூலமேடு முருகேசன் (28) ஆகிய 5 பேரும் ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
விழாவைக்காண சுற்றுவட்டார ஊர்களிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் திரண்டு வந்திருந்தனர். விழா கெங்கவல்லி- தம்மம்பட்டி சாலையோரம் நடைபெற்றதையடுத்து, தம்மம்பட்டியிலிருந்து பெரம்பலூர், கெங்கவல்லி,ஆத்தூர் வழியே செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.
விழாவில் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பூங்கொடி தலைமையில் 20 மருத்துவர்கள் உள்ளிட்ட 112 பேர் கொண்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ சிகிச்சைகளை செய்தனர். நான்கு 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டன.
விழாவில் ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜோ. ஜார்ஜ், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல் இணை இயக்குநர் ரவிச்சந்திரன், கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

