
சேலத்தில் செல்லிடப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவி எலி மருந்து விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கன்னங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் மேகதர்ஷினி அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மகன் கார்த்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் மேகதர்ஷினி செல்லிடப்பேசி மீது மோகம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரான தனது சகோதரர் கார்த்தியின் செல்லிடப்பேசியை எடுத்து விளையாடி வந்துள்ளார். இதை அவரது சகோதரர் கண்டித்துள்ளார். மேலும், தனக்குத் தனியாக செல்லிடப்பேசி வாங்கித் தரும்படி கேட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவுடன் தனியாக செல்லிடப்பேசி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, இருவரையும் அவரது தாய் சமரசப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவி எலி மருந்து விஷத்தை அருந்தினார்.
இதையறிந்த அவரது தாய், மேகதர்ஷினியை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை மேகதர்ஷினி இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






