தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பணத் தகராறு: அரிவாளால் வெட்டியவர் கைது

ஏற்காட்டில் பணத்தகராறில் அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:20 am IST

ஏற்காட்டில் பணத்தகராறில் அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி செங்கலத்துப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னமணியன் மகன் பாலகிருஷ்ணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த  தங்கவேலிடம் சில்வர் ஓக் மரம் தருமாறு ஓர் ஆண்டுக்கு முன் ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் மரம் தராததையடுத்து, பாலகிருஷ்ணன் பலமுறை தங்கவேலிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் தனது வீட்டில் முகம் கழுவிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த தங்கவேல் அரிவாளால் பாலகிருஷ்ணனின் கழுத்தில் வெட்டியுள்ளார். காயமடைந்த பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து தங்கவேலை (55) கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.