பெத்தநாயக்கன்பாளையம் அருகே வறண்டு கிடக்கும் கரியகோவில் அணை மற்றும் வெள்ளாற்றுக்கு நீர்வரத்துக் கிடைக்க நீண்ட காலமாக ஆய்வில் உள்ள கல்வராயன் மலை கைக்கான் வளவு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கொட்டவாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக சார்பில் கொட்டவாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அன்பில் மகேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ஆனந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலர் வி.சி.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அழகரசன், வழக்குரைஞர் மனோகரன், ஏத்தாப்பூர் சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வறண்டு கிடக்கும் கரியகோவில் அணை மற்றும் வெள்ளாற்றுக்கு நீர்வரத்துக் கிடைப்பதற்கு, நீண்ட காலமாக ஆய்விலுள்ள,கல்வராயன் மலை கைக்கான் வளவு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை மறுஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


