குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசார பயணம்    

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 8:45 am IST

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகம் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.1 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம்  வரை கல்வி உதவித்தொகை, பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம்  முதல் ரூ.6 ஆயிரம் வரையிலான வாசிப்பாளர் உதவித்தொகை, 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25 ஆயிரம்  மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பற்றி மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் எளிதில் அறியும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் தங்களுக்கு அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எளிதில் அறிய முடியும்.  மேலும், தெருமுனை நாடக நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  தொடங்கி வைக்கப்பட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம்,  எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும்,  வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையும் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.