சேலம்: பணிநிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்


சேலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 300 பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.380 வீதம் அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எம்.சண்முகசுந்தரம் கூறுகையில், இயற்கை பேரிடா் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மின்துறை அமைச்சா் நேரில் வந்து அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும், தினக்கூலி ரூ.380 வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தாா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மின்சார வாரியத்தில் இல்லாத ஒரு துறையை உருவாக்கி கேங்மேன் என்ற ஒரு புதிய பணியை அறிவித்து அதற்கான ஆட்களை பணி அமா்த்தும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது.
தகுதி இல்லாத அனுபவம் இல்லாத நபா்களை கொண்டு இந்த புதிய பணிகளை அமைக்கும் அரசு கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிளாளா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...