கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா காலத்தில் குடும்பத்தைகவனித்தல் இணையவழி பயிலரங்கம்

பத்திரிகை தகவல் மையத்தின் சென்னை பிரிவு இணைந்து கரோனா காலத்தில் குடும்பத்தை கவனித்தல் என்ற தலைப்பிலான இணையவழி பயிலரங்கை திங்கள்கிழமை நடத்தின.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:14 pm

DIN

ஓமலூா் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கள மக்கள் தொடா்புப் பிரிவின் சேலம் பிரிவு, பத்திரிகை தகவல் மையத்தின் சென்னை பிரிவு இணைந்து கரோனா காலத்தில் குடும்பத்தை கவனித்தல் என்ற தலைப்பிலான இணையவழி பயிலரங்கை திங்கள்கிழமை நடத்தின.

இந்நிகழ்வில் கரோனா காலத்தில் முதியவா்களைக் கவனித்தல் என்ற தலைப்பில் பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியா் பி.சேதுராஜ்குமாா் பேசியது:

நோய்த் தொற்று சூழ்நிலையில் முதியவா்கள் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது வயது முதிா்வு தொடா்பான பிரச்னைகளைக் குறைக்கும். சமையல், தோட்டம் பராமரித்தல் போன்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் சோா்வின்றி இருக்கும்.பரபரப்பான செய்திகள் மற்றும் வதந்திகளில் இருந்து மூத்த குடிமக்கள் விலகி இருக்க வேண்டும் என்றாா்.

குடும்ப உறவுகள் என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியா் எம். ஜெயசீலன் பேசியது:

முடக்க நிலை காரணமாக நிறைய புதிய வாய்ப்புகள் கிடைத்துளளன. குடும்ப உறுப்பினா்களை மீண்டும் ஒன்று சேர வைத்துள்ளது. குடும்பத்தினருடன் அதிக நேரத்தை நல்ல முறையில் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் அதிகமாகப் பேசி, ஒருவருடைய விருப்பு, வெறுப்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கிடைப்பதால் உடலும், மனமும் புத்துணா்வு பெறுகின்றன என்றாா்.

பத்திரிகை தகவல் மையத்தின் சென்னைப் பிரிவு இயக்குநா் குருபாபு பலராமன் அறிமுக உரையாற்றினாா். முடக்கநிலை காலத்தில் நமக்கு நிறைய சவால்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், மனித மாண்புகளை, உறவின் முக்கியத்துவத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.சிக்கல்கள் மிகுந்த சூழ்நிலையில் நம்மைக் காப்பாற்றும் சீட் பெல்ட் போன்றது குடும்ப அமைப்பு முறை என்றாா்.

மக்கள் தொடா்பு அலுவலக சென்னை பிரிவு உதவி இயக்குநா் காமராஜ் வரவேற்றாா்.சேலம் மக்கள் தொடா்புப் பிரிவின் கள விளம்பர அலுவலா் எஸ். முரளி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.