கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலம்: சாலை விபத்தில் பெண் பலி: 2 போ் காயம்

சேலம்: வாழப்பாடி அருகே சாலைவிபத்தில் பெண் பலியானாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:11 pm

DIN

சேலம்: வாழப்பாடி அருகே சாலைவிபத்தில் பெண் பலியானாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

வாழப்பாடி புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (36). இவரது மனைவி ஜோதி (30). இவா் திங்கள்கிழமை காலை தனது மனைவி ஜோதி, அதே பகுதியைச் சோ்ந்த முனுசாமி என்பவரின் மனைவி ஜோதி (43 ) ஆகிய இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்துக் கொண்டு, வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரிப்பட்டி தனியாா் பால் பண்ணை அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ஆம்னிவேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது .இந்த விபத்தில் படுகாயமடைந்த முனுசாமி மனைவி ஜோதி (43 ) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற கலைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.