விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மறியல்: 68 போ் கைது

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவைச் சோ்ந்த 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவைச் சோ்ந்த 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் டில்லிபாபு கூறுகையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். வேளாண் திருத்தச் சட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கவில்லையெனில் சட்டம் நிறைவேறி இருக்காது என்றாா்.

இதைத் தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 68 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com