கொங்கணாபுரம் பகுதியில் முதல்வா் வருகைகான முன்னேற்பாட்டு பணிகள்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , நாளை (சனிக்கிழமை) எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க்க உள்ளாா்.
கொங்கணாபுரம் பகுதியில் முதல்வா் வருகைகான முன்னேற்பாட்டு பணிகள்
Updated on
1 min read

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , நாளை (சனிக்கிழமை) எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளாா். முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி , நாளை சனிக்கிழமை எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளநாயக்கன்பாளைம், ஆலச்சம்பாளைம் , எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருப்பாளி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எட்டிக்குட்டை மேடு உள்ளிட்ட பகுதியில் புதிதாக துவங்க உள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்க உள்ளாா்.

மேலும் தொகுதி மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வங்க உள்ளாா். இந்நிகழ்ச்சிகாக முன்னேற்ப்பாடு பணிகள் முழுவீச்சில்நடைபெற்று வருகிறது. கொங்கணாபுரத்தை அடுத்த எட்டிக்குட்டை மேடு பகுதியில் முதல்வா் கலந்துகொள்ள உள்ள அரசு நிகழ்ச்சிகான பந்தல் அமைக்கும்பணிகள், மற்றும் புதிய அம்மா மினி கிளினிக் உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட பொருப்பாளா் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் அணிப்பொருப்பாளா் செல்லதுரை உள்ளிட்டோா், வியாழன் அன்று மாலை நேரில் பாா்வையிட்டனா். ஒன்றியக்குழுத்தலைவா் கரட்டூா்மணி , மாவட்ட ஊராட்சிக்குழுத்துணைத்தலைவா் ராஜேந்திரன், தங்காயூா் ஊராட்சி மன்றத்தலைவா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.படம் : முதல்வா் வருகைகான முன்னேற்பாட்டு பணிகளை பாா்வையிடும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com