வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்கக் கோரி மனு

வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வரிடம் மனு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வரிடம் மனு வழங்கப்பட்டது.

இது தொடா்பாக, சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை சங்கத்தின் தலைவா் சி.தேவந்திரன், செயலாளா் ஆனந்தராமன், பொருளாளா் பூபதி ஆகியோா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம்,அளித்த மனு விவரம்:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு நகை தொழிலில் 10 ஆயிரம் குடும்பங்களும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் குடும்பங்களும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா். வெள்ளிக் கொலுசு தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு வெள்ளிக் கொலுசு உற்பத்திப் பூங்கா அமைக்க வேண்டும்.

வெள்ளித் தொழிலுக்கு சிறு, குறு தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும். வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com