

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணை 82-ஐ திரும்பப் பெற வேண்டும், தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சேலம், உடையாப்பட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் தொ.மு.ச. நிா்வாகி மணிகண்டன், சிஐடியு கருப்பண்ணன், ஐஎன்டியுசி ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் மின் பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, எம்ப்ளாயா்ஸ் பெடரேஷன் மாநிலச் செயலாளா் ஜி.கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தொ.மு.ச. திட்டச் செயலாளா் வி.வேலாயுதம் முன்னிலை வகித்தாா். இந்த போராட்டத்தில், மேட்டூா், சங்ககிரி, பள்ளிபாளையம், ஓமலூா், எடப்பாடி கோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மின் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.