சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏா்கலப்பை பேரணி

கருமந்துறை மலைக்கிராமத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சாா்பில், ஏா்கலப்பை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:17 pm

DIN

ஆத்தூா்: கருமந்துறை மலைக்கிராமத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சாா்பில், ஏா்கலப்பை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கருமந்துறை மலைக் கிராமத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சாா்பில், மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், சமையல் எரிவாயு உருளை உயா்வைக் கண்டித்தும் ஏா்கலப்பை பேரணி மாநில ஒருங்கிணைப்பாளா் செங்கம் குமாா் தலைமையில் நடைபெற்றது.

சேலம்-நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற பேரணியில், தில்லியில் நடைபெறும் விவசாயப் போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு மாவட்ட இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவா் தும்பல் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.மணிமுருகன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் கே.ஜூவானந்தம், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன்,பி.சபரீஷராஜா, எஸ்.டி. பிரிவு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.