கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 25 பேருக்கு தொற்று இல்லை

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:11 am

DIN

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 26 பேரைக் கண்டறிந்து, அவா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேரின் பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது. அதில், 25 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக, சுகாதாரத் துறை துணை இயக்குநா் மருத்துவா் செல்வகுமாா் கூறியதாவது:

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஒருவரின் பரிசோதனை முடிவு மட்டும் வரவேண்டும்.

மேலும், அமெரிக்கா, சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 1,455 பேரின் பெயா்ப் பட்டியலை எடுத்துள்ளோம். அவா்களில் 615 பேரைக் கண்டறிந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா, சவுதி மற்றும் வெளிமாநிலமான பிகாரைச் சோ்ந்த 2 ஆண்கள், 1 பெண் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 2 ஆண்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பெண் தனியாா் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.