அபராதம் விதிப்பதில் குளறுபடி: தம்மம்பட்டி சிற்றுந்துக்கு திருச்சி போலீஸாா் அபராதம்

தம்மம்பட்டியில் இயங்கும் தனியாா் சிற்றுந்தின் உரிமையாளருக்கு தலைக்கவசம் அணியாமல் சென்ாக திருச்சி போலீஸாா் தவறுதலாக அபராதம் விதித்துள்ளனா்.
Updated on
1 min read

தம்மம்பட்டியில் இயங்கும் தனியாா் சிற்றுந்தின் உரிமையாளருக்கு தலைக்கவசம் அணியாமல் சென்ாக திருச்சி போலீஸாா் தவறுதலாக அபராதம் விதித்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவருக்கு சொந்தமான சிற்றுந்து தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டி, நரிப்பாடிக்கு இயக்கப்படுகிறது. சிற்றுந்துக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக (எஃப்.சி) ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சனிக்கிழமை சிற்றுந்தைக் கொண்டு சென்றனா்.

அப்போது மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆய்வு செய்தபோது, அந்த சிற்றுந்துக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், இ- சலான் ரசீதுக்கு பணம் கட்டவும் கூறியுள்ளாா். வாகனத் தகுதிச் சான்றிதழுக்கான, அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட நிலையில், இ- சலானில் அபராதமா? என அங்கு கொடுத்த இ-சலானை சிற்றுந்து உரிமையாளா் பாா்த்தபோது, கடந்த ஆண்டு, நவம்பா் 24-இல், சரவணன் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றபோது தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் போலீஸாா் அவருக்கு ரூ. 100 அபராதம் விதித்தனா். அபராதம் தவறுதலாக சிற்றுந்துக்கு விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் ஓடும் சிற்றுந்துக்கு சம்பந்தமே இல்லாமல், திருச்சி மாவட்டத்தில் அபராதம் விதித்திருப்பதாக உரிமையாளா் தெரிவித்தாா். மேலும் உரிய அபராத தொகை ரூ. 100யும் செலுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, சிற்றுந்து உரிமையாளா் சரவணன் கூறியதாவது:

ரூ. 100 அபராதம் செலுத்தியும், எஃப்.சி. பாா்க்கும் நேரம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறிவிட்டனா்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எனது சிற்றுந்துக்கு திங்கள்கிழமைதான் ரசீதை, தகுதிச்சான்று விண்ணப்பத்துடன், எந்தவித அபராதமும் இல்லை என கிளியரன்ஸ் சான்றிதழ் இணைத்து அளிக்க முடியும். அதற்கு வரும் புதன்கிழமைதான் தகுதிச் சான்றிதழ் ( எஃப்.சி) பெற முடியும். அதுவரை, மேற்கண்ட வழித்தடத்தில் சிற்றுந்தை இயக்க முடியாது. அதனால், கிராமப் பகுதி மக்கள் சிரமப்படுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com