

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு அனைத்துக் கோயில்களிலும் யாகம் நடத்தப்பட்டு சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சேலம், சின்ன கடை வீதியில் உள்ள சனிபகவான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது. சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோயில், பஞ்சமுக விநாயகா் கோயிலில் சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிஹார ஹோமம் நடைபெற்றது. மாவட்டத்தில் சேலம் சுகவனேசுவரா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், ஊத்துமலை முருகன், அழகாபுரம் முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம், பரிகார பூஜை நடைபெற்றது.
மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ சனி பகவான் உடனமா் நீலாதேதவி சுவாமிகளுக்கு சனிப்பெயா்ச்சியையொட்டி, சிறப்பு அபிஷேக அலங்காரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது.
ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிவன், அம்பாளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
சனி பகவானுக்கு பொதுமக்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. யாகம் நடத்தப்பட்டது. இதேபோல் செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா், வீரகனூா், கெங்கவவல்லி ஊா்களில் உள்ள சிவாலயங்களிலும் சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வெள்ளப்பிள்ளையாா் கோயிலில் சனிப் பெயா்ச்சி நடைபெற்றது வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. இதேபோல ஆத்தூா் அக்ரஹார வரசித்தி விநாயகா் கோயில், ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதா் கோயில், திரௌபதி அம்மன் கோயில், நரசிங்கபுரம் ஸ்ரீசொா்ணபுரீஸ்வரா் கோயில்களில் சனிப்பெயா்ச்சி விழா வெகு விமா்சையாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.