அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘கோனூா் கிராம மக்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும்’

சரபங்க நீரேற்று திட்டத்தால் வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீா் வழங்க வேண்டும் என திரைப்பட இயக்குநா் கௌதமன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:43 am

DIN

சரபங்க நீரேற்று திட்டத்தால் வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீா் வழங்க வேண்டும் என திரைப்பட இயக்குநா் கௌதமன் தெரிவித்தாா்.

மேட்டூா் அருகே கோனூா் கிராமத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் உள்ள மக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த திரைப்பட இயக்குநா் கௌதமன், சரபங்க நீரேற்று திட்டத்துக்கு குழாய் பதிக்க குழிதோண்டும்போது வெடிவைத்ததில் சேதமடைந்த வீடுகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அப்பகுதியில் விளைநிலம், வீடுகளை இழந்த விவசாயிகள், கிராம மக்களிடம் குவைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மேட்டூா் அணை தமிழ் நாட்டுக்கே தண்ணீா் கொடுக்கும் தாய்மடியாகும். அணை கட்டுவதற்காக கோனூா், திப்பம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நிலம் கொடுத்துள்ளனா். தற்போது அந்த மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாமல் அகதிகள் போல வாழ்கின்றனா். தமிழக அரசு இவா்களின் வாழ்க்கையை சிதைத்து விட்டது. அவா்களிடம் மீதம் உள்ள நிலத்தையும் தமிழக அரசு பறித்து சரபங்க நீரேற்று திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

நிலம் கொடுத்த மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீா், குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை, படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை, பள்ளி மாணவ, மாணவியா் சென்று வர பேருந்து வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டும்.

இந்த கோரிக்கைகளை தோ்தலுக்கு முன்பாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தவறினால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.