ஆடி அமாவாசை: தடையை மீறி மேட்டூர் காவிரியில் மூதாதையர்களுக்கு தர்பணம்
சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தனர்.


சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியில் ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தனர்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசைக்கு மேட்டூர் காவிரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்பணம் செய்வது வழக்கம். கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில்களும் முடப்பட்டு வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்தில் புனித நதிகள் பாயும் இடங்களில் மக்கள் கூடி தர்பணம் செய்வதால் கரோனா தொற்று ஏற்படும் என்பதால் பல மாவட்டங்களில் ஆற்றங்கரைகளில் கூடி தர்பணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மேட்டூர் காவிரியில் தடை குறித்து எவ்வித அறிவிப்பும் வருவாய்த்துறையோ அல்லது மேட்டூர் நகராட்சி நிர்வாகமோ முறையாக அறிவிக்கவில்லை. இதனால் இன்று காலை முதலே நூற்றுகணக்கானோர் மேட்டூர் காவிரியில் நீராடி தர்பணம் செய்து செல்கின்றனர். ஏராளமானோர் அணைக்கட்டு முனியப்பன் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர். அணைக்கட்டு முனியப்பன் ஆலயம் குறுகிய இடம் என்பதால் சமூக இடைவெளி இன்றியும் சிலர் முகக்கவசம் அணியாமலும் முனியப்பனை தரித்து சென்றனர்.
மேச்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கூடுவார்கள். ஆலயம் மூடப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் மூடப்பட்ட ஆலயத்தின் முன்பு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நின்று தரிசனம் செய்து சென்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தடை அறிவிப்பு ஏதும் இல்லாததால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் ஏராளமானோர் கூடி சுவாமியை வணங்கி சென்றனர். பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும் ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.
வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் காரணமாக பொதுமுடக்க நாளிலும் மக்கள் காவிரி கரையிலும், அணைக்கட்டு முனியப்பன் ஆலயத்திலும் மேச்சேரி பத்காளியம்மன் ஆலயத்திலும் கூடியிருப்பது கரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...