சங்ககிரியில் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி சங்ககிரி ஒன்றியத்தின் சார்பில் சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலை பகுதியில் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி சங்ககிரி ஒன்றியத்தின் சார்பில் சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலைப் பகுதியில் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் தெற்கு மாவட்டச் செயலர் டி.தாசப்பராஜ் இவ்விழாவிற்கு தலைமை வகித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் அவர் கபரசுர குடிநீர் வழங்கியும், சின்னாகவுண்டனூர் தேசியநெடுஞ்சாலை முதல் குப்பனூர் வரை 666 பனை விதைகளை விதைக்கும் பணிகளையும் தொடக்கி வைத்தார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் டி.சின்னுசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர்கள் சின்னாகவுண்டனூர் பொன்னுசாமி, தேவண்ணகவுண்டனூர் அண்ணாதுரை, வீராச்சிப்பாளையம் முத்து, நிர்வாகிகள் கண்ணன், சண்முகம், சுந்தரேஷன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...