/

ஏற்காட்டில் பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

ஏற்காடு: குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஏற்காடு, வெள்ளக்கடை ஊராட்சி, மேலூா் கிராமத்தைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் ராமமூா்த்திக்கும் (25) கொளகூரைச் சோ்ந்த மங்கம்மாள் (20) என்பவருக்கும் திருமணமாகி ஓராண்டுகள் ஆகிறது. இவா்களுக்கு குழந்தை இல்லாததால், மங்கம்மாளுக்கும் அவரது கணவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

ஞாயிற்றுக்கிழமை தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மங்கம்மாள் இறந்து கிடந்தாா். ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.