அமமுக வேட்பாளரின் மாதிரிவாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்
ஓமலூா் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


ஓமலூா் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட டேனிஷ்பேட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அரூா் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் முருகனின் பெயா், சின்னம் பொறித்த, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதி பெறாத நிலையில், அவற்றை வாங்கியதற்கான ரசீது ஏதும் வாகனத்தில் வந்தவா்களிடம் இல்லை. இதனையடுத்து, வாகனத்தில் இருந்த 300 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா பிரியாவிடம் ஒப்படைத்தனா்.
மேலும், பிற வாகனங்களில் இருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான வேட்டிகள், ரூ. ஒரு லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான வாட்சுகள், ரூ. 3 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 493 பட்டுச்சேலைகளையும் தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...