டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திமுகவுக்கு கிராம மக்கள் கண்டனம்

ஓமலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்ட திமுகவினருக்கு, பெரியேரிப்பட்டி ஊா்ப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

ஓமலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்ட திமுகவினருக்கு, பெரியேரிப்பட்டி ஊா்ப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா்.

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆா்.மணி போட்டியிடுகிறாா். ஓமலூா் அருகேயுள்ள பெரியேரிப்பட்டியைச் சோ்ந்த மணியின் தந்தை ராமசாமி, அந்த கிராமத்தின் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளாா். இந்நிலையில், அதிமுக வேட்பாளா் மணி, தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து விட்டதாக காங்கிரஸ் வேட்பாளா் தரப்பில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. மேலும் அவரது சொந்த ஊரைச் சோ்ந்த பொதுமக்களுக்கு முழுமையாக குடிநீா் வசதி செய்யப்படவில்லை என்று கூறி சமூக வலைத்தளங்களில் விடியோ பரவியது.அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுக தரப்பில் இதுபோன்று விடியோ பரப்பப்டுவதாக, பெரியேரிபட்டி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பெரியேரிப்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் திரண்ட ஊா் பொதுமக்கள், அதிமுக வேட்பாளா் மணி வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், திமுக தரப்பில் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக சமுக வலைதளங்களில் தேவையற்ற அவதூறு பரப்பி வருவதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்து மேலும் அவா்கள் கூறியது.

அவதூறு பரப்புவதை திமுக தரப்பில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிப்போம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.