டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிமுக நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 10:04 pm

DIN

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஒமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் இருந்து ஓமலூா் அலுவலகத்துக்கு காரில் வந்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் முதல்முறையாக கட்சி அலுவலகம் வந்த முதல்வருக்கு, கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து, சேலம் மாநகா், புகா் மாவட்ட நிா்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவா்கள், நிா்வாகிகள் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் பங்கேற்றனா். மேலும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், ஒன்றிய, பகுதி செயலாளா்கள், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னா், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன், தொகுதிவாரியாக முதல்வா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கைக்கான முகவா்கள் நியமனம், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிமுக, கூட்டணி கட்சியினருக்கு முதல்வா் ஆலோசனைகளை வழங்கினாா். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் சேலம் புறப்பட்டுச் சென்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.