கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தூக்கில் பிணமாக தொங்கிய 9 வயது சிறுமி : காவல்துறையினர் விசாரணை

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 9 வயது சிறுமியின் இறப்புக்குறித்து போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  

News image
கோப்புப்படம்
Updated On :1 ஆகஸ்ட் 2021, 6:45 am

DIN

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய 9 வயது சிறுமியின் இறப்புக்குறித்து போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சுப்பள்ளி கிராமம். இங்குள்ள கோவலன்காடு, நடுவளவு பகுதியைச் சேர்ந்த கணேசனின் மனைவி பிரியா (33), இத்தம்பதிக்கு சாருநிதி (9) என்ற பெண்குழந்தை உள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன் கணேசன் இறந்து விட்ட நிலையில், பிரியா தனது மகள் சாருநிதியுடன் அப்பகுதியில் வசித்துவந்தார். பிரியா அங்குள்ள பருத்தி அரைவை ஆலையில் பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் சனிக்கிழமை பிரியா வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், சாருநிதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்த மாலையில் பிரியா வீடு திரும்பியபோது, அங்கு சாருநிதி வீட்டில் பிணமாக தூங்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து பிரியா கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து நிகழ்விடம் வந்த கொங்கணாபுரம் காவல்துறையினர், சாருநிதியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் 9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வாய்பு குறைவான நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலைசெய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனையினை தீவிரப்படுத்தி வருகின்றனர். 9 வயதே ஆன பள்ளி சிறுமி தூக்கில் சடலாமாக தொங்கிய நிகழ்வு அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.