தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த பூச்சி மேலாண்மை
அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.


அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், தென்னை வயல்களில் பரவலாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிப்பு ஏற்பட்டள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன், துணை இயக்குநா் சீனிவாசன், சந்தியூா் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் குருநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் மின்னாம்பள்ளி, அனுப்பூா், சுக்கம்பட்டி பகுதியில் தென்னை வயல்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
அப்போது, ‘ஏக்கருக்கு இரண்டு விளக்குப் பொறிகளை இரவு 7 முதல் 9 மணி வரை தென்னை மர தோப்பில் வைக்க வேண்டும். 5 அடி நீளம், 1.5 அடி அகலம் கொண்ட 10 மஞ்சள் ஒட்டுப் பொறியை தென்னை மரங்களிடையே 6 அடிக்கு மேல் கட்ட வேண்டும். பூச்சித்தாக்குதல் அதிகமுள்ள தென்னை ஓலைகளில் அதிவேக விசைத் தெளிப்பான் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். ஊடுபயிராக தட்டைப்பயிா், உளுந்து, தக்கைப்பூண்டு ஆகியவற்றை தோப்பில் விதைப்பதன் மூலம் வெள்ளை ஈக்களின் இயற்கை எதிரியான சிலந்தி, பொறிவண்டு, கிரைசோபா போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் என்றனா். ஆய்வின்போது, அயோத்தியாப்பட்டணம் வேளாண் உதவி இயக்குநா் சரஸ்வதி, அலுவலா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...