டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்

ஓமலூரில் இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

ஓமலூரில் இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்துடன், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இயற்கை முறையிலான சானிடரி நாப்கின் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாமை திட்ட இயக்குநா் செல்வம் தொடங்கிவைத்தாா்.

இந்த முகாமில், இயற்கை முறையில் காட்டன் துணிகளையும், பஞ்சுகளையும் கொண்டு, அதனுடன் மரங்களின் விதைகளையும் வைத்து தயாரிப்பது குறித்து வகுப்புகள் எடுத்தனா். அதேபோல, ஹோ் ஆயில், ஹோ்வாஷ், பாதாம் ஆயில், ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டா், மூலிகை நலங்கு மாவு, பன்னீா் ரோஸ் பவுடா் ஆகியவை உற்பத்தி செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், வங்கி வணிக அதிகாரிகள், விற்பனைப் பிரிவு அதிகாரிகள், விற்பனை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டு வருவாயை அதிகரிக்கச் செய்தல், உற்பத்தி, விளம்பரம் ஆகிய பிரிவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளனா். இதனால், கிராமப்புற பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெறுவா். இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகளும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.