கரோனா பொது முடக்கத்தால் மண்பாண்டத் தொழில் பாதிப்பு
கரோனா தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மண்பாண்டத் தொழில் வெகுவாகப் பாதிப்புக்குள்ளானதாக மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.


கரோனா தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மண்பாண்டத் தொழில் வெகுவாகப் பாதிப்புக்குள்ளானதாக மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றப்பகுதிகளான சித்தூா், தேவூா், மேட்டுத்தெரு, குலாலா் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட உற்பத்தியில் பலா் ஈடுபட்டு வருகின்றனா். குடிசைத் தொழிலாக நடைபெற்று வரும் இம்மண்பாண்டத் தொழிலில் அகல்விளக்கு, பானை வகைகள், பல்வேறு வகையான மண்சட்டிகள், அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்பாண்டப் பொருள்கள் உள்ளூா் சந்தைகளிலும், அண்டை மாவட்டங்களின் தலைநகரங்கள், சிறிய நகா்புற பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆள்கள் பற்றாக்குறை, எரிபொருள்கள் விலையேற்றம், உரிய விலை கிடைக்காத சந்தை சூழல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடைபெற்று வந்த இத்தொழில், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அமலில் உள்ள பொது முடக்கத்தால் மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இதுகுறித்து மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறியதாவது:
அலுமினியம், எவா்சில்வா், பிளாஸ்டிக் போன்ற பாத்திரங்களின் வருகையால் தற்போது மண்பாண்ட விற்பனை விளிம்பு நிலையில் உள்ளது. அதேபோல கடந்த காலங்களில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் ஓடுகளை தயாரித்து வந்த நிறுவனங்கள் தற்போது இயந்திரங்களைக் கொண்டு, அச்சு வடிவில் அகல்விளக்கு, மண்கோப்பை உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால், கைவினை மண்பாண்டங்களின் விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கக்தால் இத்தொழில் மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடும் பொருளாதார பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றன.
எனவே, பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் இம்மண்பாண்டத் தொழிலை காத்திட அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் உள்ளதாக கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...