சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிடப்பில் போடப்பட்ட சாக்கடைப் பணி பொதுமக்கள் அவதி

 சாக்கடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:22 pm

DIN

 சாக்கடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக வேம்படிதாளத்தின் சாலை ஓரத்தில் குழி தோண்டப்பட்டது. இந்த குழாய் அமைப்பதற்காக அங்கிருந்த சாக்கடையை அகற்றி விட்டனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு இப்பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக ஏற்கெனவே இருந்த சாக்கடையை உடைத்துவிட்டு குழி தோண்டினா். அதன் பின்னா் இந்தப் பணியே அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா்.

இதனால் மழை நீரும் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்பதால் கடும் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்று வியாதிகள் பரவ வாய்ப்புள்ளது.

இந்தப் பகுதியை கடந்து செல்வோா் குழியில் விழுவதால் காயம் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.