பருவகால மாற்ற பாதிப்பை குறைக்க ரூ. 69.68 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
பருவகால மாற்ற பாதிப்பைக் குறைக்க ரூ. 69.68 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை கோனூா் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டாண்டிகரையில் நடைபெற்றது.


பருவகால மாற்ற பாதிப்பைக் குறைக்க ரூ. 69.68 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை கோனூா் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டாண்டிகரையில் நடைபெற்றது.
கோனூா் ஊராட்சியில் உள்ள 15 குக்கிராமங்களில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டப் பணிகள் நபாா்டு நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி ரூ. 69.68 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் நிலம், நீா் மேம்பாட்டுப் பணிகள், உற்பத்தித் திறன் பெருக்கம், பருவகால மாற்ற பாதிப்பினைக் குறைக்க திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் பாமா புவனேஸ்வரி, ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன முதன்மைப் பொது மேலாளா் கண்ணன், தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளா் ரவிச்சந்திரன், கோனூா் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராஜ், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்கள், கால்நடைத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...