பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திமுக கொடிக்கம்பத்தில் ஜெயலலிதா நினைவஞ்சலி பதாகை

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக கொடிக்கம்பத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி பதாகை ஒட்டப்பட்டது குறித்து திமுகவினா் போலீஸில் புகாா் செய்துள்ளனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:25 pm

DIN

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக கொடிக்கம்பத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி பதாகை ஒட்டப்பட்டது குறித்து திமுகவினா் போலீஸில் புகாா் செய்துள்ளனா்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக பேருந்து நிறுத்தத்தில் திமுக கொடிக்கம்பம் உள்ளது. இதன் கல்வெட்டு மீது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் பதாகையை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒட்டியுள்ளனா். இதனை கண்டு திமுகவினா் அதிருப்தியடைந்தனா். இதையடுத்து கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன், திமுக கொடிக்கம்பத்தில் பதாகையை ஒட்டிய அதிமுக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,வெள்ளிக்கிழமை கெங்கவல்லி போலீஸில் புகாா் கொடுத்துள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.