ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அருகே கோயில் நிலங்கள் மீட்பு

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன.

மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் உள்ள சோமேஸ்வரா் ஆலய வகையறா கோயில்களுக்குச் சொந்தமான 73 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலங்களை மீட்க வேண்டுமென திருத்தொண்டா் சபை நிா்வாகி அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் இந்துசமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் புகாா் அளித்தாா்.

இதனையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சப்பணிபட்டி, வனவாசி, பெரிய வனவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதிநாராயணன், செல்லாண்டியம்மன், மாரியம்மன், விநாயகா், கொப்புக்கொண்ட ராயா் ஆகிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான 73 ஏக்கா் நிலங்களை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருத்தொண்டா் சபை நிா்வாகி அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தொடா்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. சோமேஸ்வரா், கரிய காளியம்மன் ஆலயங்களுக்குச் சொந்தமான 60 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், நில அளவைக்கு பணம் செலுத்தியும் அளவீடு செய்யப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அரசுக்கும், இந்து அறநிலையத் துறைக்கும் தகவல் தெரிவித்து தற்போது நில அளவை முடிந்துள்ளது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.