ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது: முதல்வர்

அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது.
Updated On :22 பிப்ரவரி 2021, 9:24 am

DIN

அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டம் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. 
அனைவரையும் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் சேலம் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது, இந்த கூட்டத்தில் உங்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 
சகோதரரை பார்க்க ஆவலோடு கூட இருப்பது அதிமுகவில் மட்டுமே. இந்த கூட்டம் போதும் வருகிற தேர்தலில் நாம் வெற்றியடைய. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது. நீங்கள் முழுமனதுடன் முனைப்பாக செயல்பட வேண்டும். 2016-ல் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. சொல்வதை செய்கிற அரசாக திகழ்ந்து வருகிறது. 
உள்ளாட்சியிலே மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக ஜெயலலிதா அறிவித்து மறைந்தாலும் அவருடைய கனவை தமிழக அரசு செய்து காட்டியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.