அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரியாா் பல்கலை. துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பு

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:00 am

DIN

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழக 7-ஆவது துணை வேந்தா் பேராசிரியா் பொ.குழந்தைவேல் வியாழக்கிழமை தனது 3 ஆண்டுகால பணியை நிறைவு செய்தாா். இதையடுத்து, அடுத்த துணை வேந்தா் நியமிக்கப்படும் வரை, அப்பணிகளை மேற்கொள்வதற்காக நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துணை வேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா காணொலி வாயிலாக பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில், துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பாளராக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, உறுப்பினா்களாக பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன், மொழியியல் அறிஞா் பேராசிரியா் அ.அருணாச்சலம் ஆகியோரை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.