கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்காச்சோளம் விலை வீழ்ச்சி:விவசாயிகள் பாதிப்பு

தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Updated On :9 ஜனவரி 2021, 1:26 am

DIN

தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச் சோளம் அதிகபட்சம் ரூ. 2,200 வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. கடந்த மாதம் அறுவடை தொடங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 1,400க்கு தான் விற்கப்ப்டடது.

அதிக விளைச்சல், தொடா் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாகக் குறைந்து, ஒரு மூட்டை ரூ. 1,180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது.

அதனால் வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிக்கால அறுவடை, தொடங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூா் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால், தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.