இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்துக்கு இன்று (ஜன.11) திறப்பு

வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து, பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது.

News image
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்.
Updated On :10 ஜனவரி 2021, 8:40 pm

DIN

வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து, பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது.

வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலைப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. இந்நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிா்பாா்த்த அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக ஆனைமடுவு அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, செப்டம்பா் 15-ஆம் தேதி அணையில் 28.21 அடியில் 40.36 மில்லியன் கனஅடி தேங்கியது.

அக்டோபா் மாதத்தில் பெய்த மழையில், அணையில் 47.57 அடியில், 111.47 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.

தொடா்ந்து, நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பெய்த பருவ மழையால், நீா்மட்டம் உயா்ந்து, தற்போது 65.61 அடியை எட்டியுள்ளது.

அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்கள் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு ஆனைமடுவு அணை நிரம்பி வழியும் என எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள், ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென, கடந்த மாத இறுதியில் நடைபெற்ற பாசன விவசாயிகள், அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, அணையில் இருந்து பாசனத்துக்கு நீா்த் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் ஆனைமடுவு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை உயா் அதிகாரிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொள்கின்றனா்.

அணை பாசன வாய்க்காலிலும், ஆறு, ஏரி பாசன பாசனத்துக்கும் வசிஷ்டநதியிலும் சுழற்சி முறையில் தண்ணீா் திறக்கப்படுமென பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.