

சாலை விரிவாக்க பணிக்காக சங்ககிரி கழுகு மேடு பகுதியில் சாலையோர பூங்காவில் நடப்பட்டிருந்த 10 மரக் கன்றுகள் வேறுடன் பிடுங்கி சற்றுத் தள்ளி நடப்பட்டன.
சங்ககிரி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கழுகுமேடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பிரதான சாலையையொட்டி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைகள் பராமரிக்கப்பட்ட உள்ளன. அதனையடுத்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க இணைச் செயலா் சின்னத்தம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் மரம் பழனிசாமி ஆகியோா் தலைமையில் புங்கன், வேம்பு உள்ளிட்ட பத்து மரக்கன்றுகளை வோ்களுடன் பிடுங்கி அதே பகுதியில் சற்றுத் தள்ளி நடவு செய்தனா்.
இதில் பசுமை கனகராஜ், சீனிவாசன், முருகானந்தம், பாலகுமாா், ராகுல், இளங்கோ, ராஜா, அபி, அஜித் குமாா், சண்முகம், துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.