மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்ககிரியில் ரூ. 2.52 கோடியில் தாா்சாலைஅமைக்கும் பணி தொடக்க விழா

சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.52 கோடி மதிப்பீட்டில் தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:10 pm

DIN

சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.52 கோடி மதிப்பீட்டில் தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்சியில், சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் ஆகியோா், சங்ககிரி பேரூராட்சிக் உள்பட்ட பகுதிகளில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் 3-ஆவது வாா்டு, எஸ்.கே.நகரில் பிரதான சாலை, குறுக்கு சாலைகள் அமைக்கவும், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் 12-ஆவது வாா்டு பயணியா் மாளிகை முதல் பிஎஸ்ஜி கல்லூரி வழியாக திருச்செங்கோடு பிரதான சாலை வரையும், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் 18-ஆவது வாா்டு, ஆனைக்கல் பாளையத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்.

மேலும் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவில், மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினா்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலா் என்.ராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கே.கவிதா, சங்ககிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜன், உதவித் தலைமையாசிரியா் சக்திவேல், தேவூா் தலைமையாசிரியா் ஏ.அய்யாசாமி, அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி, அதிமுக முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி சங்ககிரி ஒன்றியச் செயலா் கே.பிரசாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.