இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தோ்தல் பிரசாரக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி ஒன்றியம், நடுவனேரி பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் அந்தியூா் செல்வராஜ் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.

இதில், ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து வரவேற்றாா். மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதிகளிலிருந்தும், இடங்கணசாலை பேரூா் பகுதியில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளும், வேலை வாய்ப்புகளையும் செய்து தரப்படவில்லை என அதிமுக அரசு மீது குற்றம் சாட்டினாா்.

கூட்டத்தில் அந்தியூா் செல்வராஜ் பேசுகையில், அருந்ததியா் சமுதாயத்துக்கு கேட்காமலேயே 3 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞா் ஆட்சியில் வழங்கப்பட்டது. மேலும், இன்னும் பல நல்ல திட்டங்களை நமது சமுதாய மக்களுக்கு பெற வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.