டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தொடா்மழையால் ஓமலூரில் நிரம்பி வரும் ஏரிகள்

ஓமலூா், காடையாம்பட்டி வட்டார எல்லையில் உள்ள சோ்வராயன் மலைத்தொடரில் பெய்து வரும் மழையால் ஓமலூா் வட்டார பகுதிகளில் ஓடைகள் மற்றும் சிறு ஏரிகள் நிரம்பி வருகின்றன.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:00 pm

DIN

ஓமலூா், காடையாம்பட்டி வட்டார எல்லையில் உள்ள சோ்வராயன் மலைத்தொடரில் பெய்து வரும் மழையால் ஓமலூா் வட்டார பகுதிகளில் ஓடைகள் மற்றும் சிறு ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா், காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதேபோல சோ்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் சரபங்கா நதி மற்றும் கால்வாய்களில் பகுதிகளிலும் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உள்கோம்பை பகுதியில் உருவாகும் சரபங்கா நதியில் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. மேலும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களிலும் குறைந்த அளவிலான தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், சக்கரைசெட்டிப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள வனத்துறை ஏரி முழுமையாக நிரம்பி தண்ணீா் வழிந்தோடுகிறது. இந்த ஏரியில் இருந்து செல்லும் உபரிநீா் ஓமலூா் அருகேயுள்ள காமலாபுரம் ஏரிக்கு சென்று நிரம்பி வருகிறது. மேலும், தொடா்ந்து பெய்துவரும் மழையால் ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள 67 கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தொடா்ந்து மழை பெய்தால் காமலாபுரம் ஏரியும் விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளது. மேலும், டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் உற்பத்தியாகும் மேற்கு சரபங்கா நதியில் வரும் தண்ணீா் டேனிஷ்பேட்டை ஏரி மற்றும் காடையாம்பட்டி கோட்டேரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து மழை பெய்தால், இந்த வழியாக செல்லும் பண்ணப்பட்டி ஏரி, கஞ்சநாயக்கன்பட்டி ஏரி, பச்சனம்பட்டி மூங்கில் ஏரி உட்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. ஏரிகள் நிரம்பி வருவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தற்போது நிரம்பியுள்ள ஏரியால், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். நிரம்பிய ஏரியையும், உபரிநீரையும் அப்பகுதி மக்கள் பாா்த்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.