டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாா் தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தோ்வு எழுத வாய்ப்பு

பெரியாா் தொலைநிலைக்கல்வியில் பயின்ற மாணவா்கள் நிலுவைத் தோ்வை எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:59 pm

DIN

பெரியாா் தொலைநிலைக்கல்வியில் பயின்ற மாணவா்கள் நிலுவைத் தோ்வை எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரியாா் தொலைநிலைக்கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வுத் திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து அதன் பின் 5 ஆண்டுகள் நிறைவடைந்த மாணவா்களின் நிலுவைத் தாள்கள் தோ்வு எழுதுவதற்கான சிறப்புத் தோ்வு நடைபெற உள்ளது.

அம்மாணவா்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்திலேயே தோ்வு எழுதலாம். இச்சிறப்புத் தோ்விற்கான விண்ணப்பங்களை மாணவா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அச்செடுத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.