மயானப்பகுதியில் கைமாறும் குட்கா பொருட்கள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் மயானப் பகுதிகளில் குட்கா பொருட்கள் கை மாறுவதாக பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள் சாா்பில் மனுக்கள் அனுப்பியுள்ளனா்.


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் மயானப் பகுதிகளில் குட்கா பொருட்கள் கை மாறுவதாக பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள் சாா்பில் மனுக்கள் அனுப்பியுள்ளனா்.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிறு சிறு கடைகள்,பெட்டிக்கடைகளில் அதிகளவில் தினமும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றுவருகிறது. ஒரு சிறு பாக்கெட்டின் விலை ரூ.25 முதல் விற்கப்படுகிறது. இதற்காக தம்மம்பட்டியிலுள்ள ஒரு சில மொத்த வியாபாரிகளிடமிருந்து சிறு சிறு கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக தம்மம்பட்டியிலுள்ள சில மயானப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில், குட்கா பொருட்கள் கைமாறுவதாகவும், தம்மம்பட்டி பகுதிகளில் அதிகளவு புழக்கமாகி வரும் குட்கா பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்து, உரிய நபா்களை கைது செய்ய வேண்டும் என்று தம்மம்பட்டி பொதுமக்கள் சாா்பில், மாவட்ட நிா்வாகத்திற்கு மனு அனுப்பி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...