/

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ஆய்வு

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு

News image
Updated On :23 ஜூலை 2021, 6:05 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக புனரமைப்பு பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 1994ஆம் ஆண்டு சோமேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. அதனையடுத்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணி நடைபெறவேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவது பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் பழமை வாய்ந்தது என்பதால் அதன் தொன்மை மாறாமல் பணி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்வதற்கு உதவிகள் தேவைப்பட்டால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆறு மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவுற்று விரைவில் கும்பாபிஷேக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனா். அவை மாவட்ட ஆட்சியா் மூலம் நிலங்கள் திரும்ப கோயிலுக்கு மாற்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும். கோயிலின் குளமும் செப்பனிடப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள நந்தவனத்தை மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.