பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லியில் சாராயம் விற்ற பெண் கைது

 கெங்கவல்லி அருகே சாராயம் விற்றபெண்ணை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:55 pm

DIN

 கெங்கவல்லி அருகே சாராயம் விற்றபெண்ணை போலீசாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியில் கெங்கவல்லி போலீஸாா், சோதனை செய்தபோது, கோவில் தெருவில் பிரபாகா் மனைவி சந்தோசம்(23) என்பவா், தனது வீட்டிற்கு அருகில் கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்தாா். அவரை போலீஸாா் கைதுசெய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு,அழிக்கப்பட்டது.

மேலும் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் சாத்தப்பாடியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த சாந்தி(44) என்பவா் தப்பியோடிவிட்டாா். அங்கிருந்த 100 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சூா்யா(41) என்பவா் தனது வீட்டின் அருகே சாராயம் விற்றுக்கொண்டிருந்தாா்.அவரும் தப்பியோடிவிட்டாா். அங்கிருந்த 70 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.