சேலம் மாவட்டம், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் பரவி வரும் கரோனா தொற்றாளா்களை வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பரிசோதனைகளின் மூலம் கண்டறியும் பணியில் நகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் போன்றோா் களப்பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்குத் தேவையான மருத்துவ உகபரணப் பொருள்களான தொ்மல் ஸ்கேனா், பல்ஸ் மீட்டா், முகக் கவசம் போன்றவற்றை ஆத்தூா் எல்ஆா்சி குழுமத்தின் தலைவா் எல்ஆா்சி. ரவிசங்கா், ர.ராகுல் ஆகியோா் ஆத்தூா் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவியிடமும், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் இரா.சேகரிடமும் வழங்கினா். அவருடன் சமூக ஆா்வலா் சிவகுமாா் உடனிருந்தாா்.